டீக்கடைக்காரர் தற்கொலை

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-23 20:21 GMT

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் வள்ளிநகரை சேர்ந்தவர் தளவாய் மணி (வயது 52). இவர் வி.எம்.சத்திரம் பகுதியில் டீக்கடை வைத்து இருந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்