டீக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து

டீக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-10-10 20:59 GMT

திருச்சி தென்னூர் இமாம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமதுயாசிக் (வயது 18). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவருடைய கடைக்கு 4 சிறுவர்கள் வந்தனர். அவர்கள் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். அப்போது முகமதுயாசிக் சிகரெட்டுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்து அவருடன் தகராறு செய்துள்ளனர்.

மேலும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முகமதுயாசிக்கை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த முகமதுயாசிக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்