டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரியகுளத்தில் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பெரியகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 50). டெய்லர். இவர் தென்கரை பஜார் வீதியில் தையல் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.