ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரி வசூல் தீவிரம்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-03-16 17:59 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.5 கோடி வரி வசூல் பாக்கி உள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள், நகராட்சி ஆணையர், மேலாளர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர். இதன் மூலம் சுமார் ரூ.1.5 கோடி வரி வசூலான நிலையில் மீதம் ரூ.3.5 கோடி பாக்கி உள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையாக நகராட்சிக்கு சுமாா் ரூ.25 லட்சம் குடிநீர் வரி பாக்கி வர வேண்டி உள்ளதால், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்து வருகின்றனர். இதில் நகராட்சி ஆணையர் மூர்த்தி, மேலாளர் அன்புச்செல்வி மற்றும் குடிநீர் பொருத்துனர் பாண்டியன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதேபோல், ரூ.87 லட்சத்துக்கு மேல் சொத்து வரியும், ரூ.22 லட்சம் தொழில் வரியும், காலிமனை வரி விதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வரி செலுத்தப்படவில்லை. மேலும் வரியில்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்போது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக வசூலித்து வருகிறது. மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது, வரி செலுத்த தவறுவோர் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்