சென்னையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் பேரணி
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
சென்னை,
டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.