டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை மனு

டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2022-11-10 22:22 GMT

துவாக்குடி:

திருச்சி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் மாவட்ட செயலாளர் பவளக்கண்ணன் தலைமையில் மாநில துணைத்தலைவர் ராயப்பன், மண்டல செயலாளர் காமராஜ், மாவட்ட தலைவர் சேவியர் ராஜா, பொருளாளர் சொக்கலிங்கம் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 90 நாட்களுக்குள் விற்பனை செய்ய வேண்டிய குறிப்பிட்ட வகை மது பாட்டில்களை அதிகளவில் கடைகளுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் அந்த வகையான மது பாட்டில்கள் விற்பனையாகவில்லை என்றால், அதனுடைய பாதிப்பை அந்தந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தலையில் சுமத்திவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதுபோன்ற மது வகைகளை அதிக அளவில் அனுப்ப வேண்டாம். இதுபற்றி விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்