மே தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளாா்.

Update: 2023-04-28 18:45 GMT

விழுப்புரம்:

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மே தினத்தன்று அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மே தினத்தன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார். எனவே மே தினத்தன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் இயங்காது.

இதேபான்று கள்ளக்குறிச்சி மவாட்டத்திலும் நாளை மறுநாள்(திங்கள்கிழமை) அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்