முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-28 19:33 GMT

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு:- விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் விவசாய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேட்டு வாய்க்காலில் மனித கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நகராட்சியை அறிவுறுத்த வேண்டும்.

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்

மாநிலச் செயலாளர் கார்த்திகேயன்:- முசிறி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.

கலைச்செல்வன்:- முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன், இந்த முறையாவது கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.

ராவணராஜேஷ்:- ஏரிகளை தூர்வாரினால் மட்டும் போதாது. நீர் வரும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து கோட்டாட்சியர் ராஜன் பேசும்போது, தங்களது கோரிக்கைகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வருவாய் துறை, நகராட்சி துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்