டாஸ்மாக் கடை அகற்றம்: கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி

தேவிபட்டணத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் துரை ரவிச்சந்திரனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2023-06-17 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டரிடம் வழங்கினர். மேலும் ேதவிபட்டணம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் அவசர கூட்டம் நடத்தி, டாஸ்மாக் கடையை அகற்றவில்லையெனில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் ராஜினாமா செய்து விடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையடுத்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில், தேவிபட்டணத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 15 நாட்களில் அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை தேவிபட்டணம் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் பொதுமக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார். பஞ்சாயத்து துணைத்தலைவர் மாடசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்