தஞ்சையில் டாஸ்மாக் கடை முற்றுகை

தஞ்சையில் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-15 20:36 GMT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அதன்படி புதிய தமிழகம் கட்சியினர் தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டில்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதையடுத்து அங்கு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை உடைத்து போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் உத்திராபதி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மது பாட்டில்களை உடைக்க முயன்றனர். அதற்குள் அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்