டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பனைக்குளம்,
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டனர். இதை கண்டித்து கோஷம் எழுப்பிய மக்களவையில் தி.மு.க. எம்.பி.யும் தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பேரவை செயலாளருமான சண்முகம் உள்ளிட்ட 11 எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் இடை நீக்கம் செய்தார்.
இதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வழுதூர் எம்.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். இதில் மக்களவை எம்.பி.க்கள் 11 பேர் மீது இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச மாவட்ட தலைவர் பெரியார் போஸ், மாநில செயலர் கோட்டை இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் பழ முத்து அதிவீரபாண்டியன், கலைஞர் கணபதி, சேகர், பாஸ்கர சேதுபதி, பழ முத்துநாதன், உதயசூரியன், முத்து, பாண்டி மற்றும் தொ.மு.ச உறுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.