பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 22:09 GMT

சேலம்:

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தும் மதுக்கூடங்களை மூட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் குமார், ஆறுமுகம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர்களை அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படையான முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும், தொழிலாளர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்