ஊட்டியில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க கூட்டம்

ஊட்டியில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க கூட்டம்

Update: 2022-09-24 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களின் 9-வது பேரவை கூட்டம் ஊட்டி மாவட்ட குழு அலுவலத்தில் நடந்தது. இதற்கு நிர்வாகி ஆல்துரை தலைமை தாங்கினார். ராஜன் கொடியேற்றினார். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் சிவகுமார் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதில் நிர்வாகிகள் தியாகராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ், டாஸ்மாக் செயலாளர் மகேஷ், டாஸ்மாக் மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் நவீன்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்