டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டம்

Update: 2023-08-10 18:45 GMT

திருவாரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள்மணி தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் முத்துபாண்டி, நிர்வாகிகள் ராஜகுரு, கண்ணன், சந்திரசேகரன், விஜயகுமார், பாலதண்டாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நிர்வாக காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உடனே பணி வழங்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள கடைகளில் பணி நிரவல் முறை என்பதை முறையாக செயல்படுத்திட வேண்டும். சரக்கு இறக்கும் கூலி வாகன ஒப்பந்தகாரர்களை ஏற்று கொள்ள செய்தல் வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரே மாதிரியான சரக்குகளை அனுப்ப வேண்டும். கடைகளில் ஆய்வு செய்யும் பறக்கும் படையின் அத்துமீறல் செயல்கள் கண்டிக்கதக்கது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்