வேன் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி

வேன் மோதி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.

Update: 2023-08-01 19:02 GMT


விருதுநகர் சாமியார்கிணறு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). இவர் விருதுநகர் மாலைப்பேட்டை தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் ெரயில்வே பீடர் ரோட்டில் சைக்கிளில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேனை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த அனந்தன் (40) என்பவர் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்