விழுப்புரத்தில்டாஸ்மாக் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

விழுப்புரத்தில் டாஸ்மாக் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-24 18:45 GMT


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த டாஸ்மாக் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் துணை செயலாளர் திருமலை, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் கடந்த 20 வருடங்களாக தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை இத்துறையிலேயே பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அல்லது கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் அரசுத்துறைகளில் பணியமர்த்த வேண்டும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்விற்கு கண்டனம் தெரிவிப்பது, விழுப்புரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் சேமிப்பு கிடங்கை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென தனியாக தியாகதுருகம் பகுதியில் அமைத்துத்தர வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு மீண்டும் பயணப்படி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்