பட்டகப்பட்டி கிராமத்தில்ரூ.8 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி - வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2023-06-11 19:30 GMT

தர்மபுரி 

நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஅள்ளி ஊராட்சி பட்டகப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரம்யாகுமார், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குமார், ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி தமிழ்செல்வன், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்