குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.;
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இந்த நாளில் இந்துக்கள் பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக புனித தலங்களில் நீராடி தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து விட்டு அருவிக்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர்.