600 ஹெக்டேருக்கு காய்கறி நாற்றுகள் வழங்க இலக்கு: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் 600 ெஹக்டேருக்கு காய்கறி நாற்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2022-08-19 13:01 GMT

தோட்டக்கலைத்துறையின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், வீரிய காய்கறி பரப்பு விரிவாக்க இனத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர பகுதி விவசாயிகளுக்கும் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக தேனி மாவட்டத்தில் 600 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி நாற்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாற்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே மானியத்தில் நாற்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நில சிட்டா, அடங்கல், ஆதார் எண் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்