400 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 டன் உளுந்து, 200 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-23 12:14 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 டன் உளுந்து, 200 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

உளுந்து, பச்சைப்பயறு

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பச்சைப்பயறு மற்றும் உளுந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், வேலூர் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு பருவத்தில் 100 டன் பச்சைப்பயறு மற்றும் 200 டன் உளுந்து மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 100 டன் பச்சைப்பயறு மற்றும் 200 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1.10.2022 தொடங்கப்பட்டது. 29.12.2022 வரை செயல்படுத்தப்படும்.

பதிவு செய்ய வேண்டும்

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சைப்பயறு மற்றம் உளுந்து நியாயமான சராசரி தரத்தினை கொண்டிருத்தல் வேண்டும். பச்சைப்பயறு கிலோ ரூ.77.55, உளுந்து ரூ.66 என விலை நிர்ணயம் செயயப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குனர், வேளாண் வணிகம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, திருப்பத்தூர் (9952625200), வேலூர் விற்பனைக்குழு (0416 2220713, 9442127206), ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திருப்பத்தூர; (8838540830), வாணியம்பாடி (9751333818) ஆகியோரை அணுகவும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க தமிழக அரசு மேற்கொண்ட இம்முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்