பட்டாவில் திருத்தம் செய்து தரக்கோரி தர்ணா
வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு பட்டாவில் திருத்தம் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை சேர்ந்தவர் சோட்டிமாபீ (வயது 82). இவர் தனது உறவினர்களுடன் பட்டாவில் திருத்தம் செய்து தரக் கோரி வந்தவாசி தாலுகா அலுவலக வாயில் முன்பு அமர்ந்து இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், சோட்டிமாபீ வீட்டுக்கு பக்கத்தில் அவருக்கு சொந்தமான 10 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்துக்கான பட்டாவில் சோட்டிமாபீ பெயருடன், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது
.எனவே, மற்றொருவரின் பெயரை பட்டாவிலிருந்து நீக்கி திருத்தம் செய்து தரக் கோரி வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பட்டாவில் திருத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராஜேந்திரன் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.