தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

எட்டயபுரம் அருகே தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-11-05 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசலபுரம்‌ கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பழைய சாலையோரத்தில் கற்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. ஆனால் சாலை பணிகள் நடைபெறவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிராமத்துக்கு பள்ளி வாகனங்களும் வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றன. ஆகவே இப்பகுதி மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்