வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.;

Update: 2023-02-27 19:05 GMT

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகள் வாங்கி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதி வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்குகடந்த வாரம் டன் ஒன்று ரூ.12ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன் ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்