தஞ்சை-மன்னார்குடி சாலை அகலப்படுத்தும் பணி
தஞ்சை-மன்னார்குடி சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
வடுவூர்:
தஞ்சை-மன்னார்குடி சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
சாலை அகலப்படுத்தும் பணி
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் கும்பகோணம் கோட்டம் மற்றும் மன்னார்குடி உட்கோட்டம் மூலம் தஞ்சாவூர்- மன்னார்குடி மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.63) அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் தொடங்கி செருமங்கலம், காரக்கோட்டை, எடமேலையூர், வடுவூர், நெய்வாசல், வாண்டையார் இருப்பு வழியாக தஞ்சை வரை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்ற வருகிறது.
தலைமை பொறியாளர் ஆய்வு
இந்த பணிகளை தலைமைப்பொறியாளர் எம்.கே.செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையின் தரம், அளவு குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்ட கண்காணிப்பு குழு பொறியாளர் வி.செல்வநாதன், கோட்டப் பொறியாளர் செ.நாகராஜன், உதவிக்கோட்டப்பொறியாளர் மாரிமுத்து, மற்றும் உதவிப் பொறியாளர் வடிவழகன், உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.