தஞ்சை மாவட்ட திட்டக்குழு கூட்டம்

தஞ்சை மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி தலைமையில் நடந்தது

Update: 2023-09-21 20:32 GMT

தஞ்சை மாவட்ட திட்டக்குழுவின் 2-வது கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், திட்டக்குழு தலைவருமான உஷா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டக்குழு உறுப்பினர்களான பேரூராட்சி தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட திட்டமிடல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்களிடம் இருந்து சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவை தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அரசுத்துறைகளிடம் இருந்து பெறப்பட்ட பதில் அறிக்கைகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் புதிதாக உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு தொடர்புடைய துறை அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோரிக்கைகளுக்கு விளக்கம் கேட்டும் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்