தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரிமளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சோமசுந்தரம் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.