தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்
உடன்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
உடன்குடி:
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி கிளை அலுவலகத்தில் நடந்தது. இந்த அமைப்பின் மாவட்ட தலைவர் ஆசாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பரகத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜோதி என்ற நூர், மாவட்ட ஊடக அணி செயலாளர் ஆபித், புதுமனை வார்டு செயலாளர் அரசு மிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவராக அப்துல் அஜீஸ், நகரச் செயலாளராக ஜகுபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளராக ஹமீது, துணைத்தலைவராக புகாரி, துணைச் செயலாளர்களாக இப்ராஹிம், ஹாலிது உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.