"தவறான வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது" - பீகார் மாநில அதிகாரிகள் குழு

வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாக பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-07 08:57 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய பீகார் அதிகாரிகள், இன்று சென்னையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்