துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்க்கிறார் தமிழிசை - அனிதா ராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-03-18 10:20 GMT

சென்னை,

சுவாமிதோப்பில் சாமி தரிசனம் செய்த பின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் நினைக்கிறார். தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டிக்கொண்டேன் என்றார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்