தமிழர் ஒற்றுமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

சங்கரன்கோவிலில் தமிழர் ஒற்றுமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-08 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி மற்றும் தேவேந்திரர் சேனா இயக்கம் சார்பில் தமிழர் ஒற்றுமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேவேந்திரர் சேனா இயக்கம் மாநில தலைவர் இருளப்ப பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவர் காளியப்பன், ஒருங்கிணைப்பாளர் முருகன்,  செயலாளர் சந்தன முத்து உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் ராஜ் பாண்டியன், முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி நிறுவன தலைவர் கரும்புலி கண்ணன், தமிழர் முன்னணி தலைவர் பிரகாஷ் நாராயணன், வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன், தமிழர் கம்மாளர் பேரியக்கம் மாநில பொதுச் செயலாளர் செல்வ சங்கர், முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் திருப்பதி, தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் ரவி, தமிழர் விடுதலைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்