வெளிமாநில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு தமிழ்ப்பயிற்சி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழ்ப்பயிற்சி 3 நாட்கள் நடந்தது.

Update: 2023-06-29 19:26 GMT

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழ்ப்பயிற்சி 3 நாட்கள் நடந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்.) 2021-ம் ஆண்டில் பணிநியமனம் பெற்ற லக்னோ, இந்தூர், பாட்னா, அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் உதவி கலெக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 13 பேருக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளியும், தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறையும்இணைந்து, சிறப்பு தமிழ்ப்பயிற்சி வழங்கி வருகின்றது.

தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வழிகாட்டுதல்படி இந்த பயிற்சி கடந்த 27-ந்தேதி தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த பயிற்சியின் தொடக்க விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், புலத்தலைவர்கள் கண்ணன், இளையாபிள்ளை மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்ப்பயிற்சி

இதில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (பயிற்சி) தமிழில் பேசவும் எழுதவும் வாசிப்பதற்குமான மொழிப் பயிற்சி வழங்கப்பட்டது. அதற்கு உதவும் வகையில் இப்பயிற்சியில் அவர்களுக்கு அடிப்படை இலக்கணம், எழுத்துப் பயிற்சி, எடுத்துக்கூறல், மொழிபெயர்ப்பு, கையெழுத்துப்படியை வாசிக்கும் பயிற்சி, உரையாடல், குறிப்புகள் எடுத்தல், சொற்கள் தொடர்களை அமைத்தல், நிர்வாகவியல் கலைச்சொற்கள், கட்டுரைகள் எழுதுதல் முதலிய மொழித்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ் கற்பித்தல் தொடர்பாக பேராசிரியர்கள் அரங்கன், முரளிதரன், ரவிசங்கர், கவிதா ஆகியோர் வழங்கினர். இந்த பயிற்சியை இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளியின் பேராசிரியர் கவிதா ஒருங்கிணைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்