தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-03-16 19:31 GMT


தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகள் 1.1.2022 அன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலை சான்று தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் நேரிலோ, தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3,500 மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்க வேண்டுகிறோம். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்