பூலித்தேவனின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பூலித்தேவனின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவிடத்தில் பூலித்தேவன் திருஉருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இது குறித்து முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-ஆவது பிறந்தநாள். மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்" என்று தெரிவித்துள்ளார்.