தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-09-25 18:30 GMT

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிரபாகரன், ராஜ்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர். இதில் வட்ட தலைவராக ஆறுமுகமும், செயலாளராக அரங்கநாதனும், பொருளாளராக பாலசுப்பிரமணியனும், மகளிர் அணி செயலாளராக செல்வியும், துணை தலைவர்களாக சரண்சிங், ராமலிங்கம், உமா, துணை செயலாளராக ராஜேந்திரன், சேரன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்