தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டம் நடந்தது.

Update: 2023-09-26 18:45 GMT

செங்கோட்டை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செங்கோட்டை கிழக்கு கிளையின் சார்பில் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் தெருவில் வரதட்சணை ஒழிப்பு மார்க்க விளக்ககூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஹாஜா மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் அஹமது முன்னிலை வகித்தார். துணை செயலாளர் வடகரை செய்யது அலி, மாவட்ட பேச்சாளர் மூமினா ஆகியோர் பேசினர். கிளை செயலாளர் இஸ்மாயில் கரீம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சாகுல்ஹமீது, ஜாபர், முத்தப்பா, மைதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்