தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் ஆய்வு

ஓச்சேரியில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 18:05 GMT

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அலுவலர் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி நேற்று ஓச்சேரியில் இயங்கி வரும் காவேரிப்பாக்கம் வட்டார திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திட்ட செயலாக்க பணிகள், நடவடிக்கைகள், மகளிர் குழுக்களின் செயல்பாடுகள், நிதி விவரங்கள், ஊட்டச் சத்து தோட்டம், நர்சரி அமைப்பு போன்ற வாழ்வாதார இயக்க செயல்பாடுகளையும், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், இணை மானிய திட்ட செயல்பாடு போன்ற வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகள் வழங்கினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகலிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்