தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு

வடுகந்தாங்கலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

Update: 2022-09-18 14:52 GMT

கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வட்ட தலைவர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் வி.கண்ணதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ஆர்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பழைய ஓய்வு ஊதியம், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், பதவி உயர்வு 20 சதவீதமாக இருப்பதை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்