தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-15 03:02 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி (நாளை) உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும், வருகிற 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்