இந்தியாவில் முதன்முறையாக தமிழக காவல்துறையில் டிஜிட்டல் விருது

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விருது வழங்கப்பட்டது.;

Update: 2022-12-01 14:24 GMT

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விருது வழங்கப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த சிலைகளை விற்பதற்கு விலை பேசி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த சிலைகளை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விருது வழங்கப்பட்டது.

திருவான்மியூரில் 15 சிலைகளை மீட்ட டிஎஸ்பி முத்துராஜ், டிஎஸ்பி மோகன், எஸ்.எஸ்.ஐ. இராமலிங்கம், தலைமை காவலர் ரீகன், லட்சுமி காந்த் ஆகியோருக்கு டிஜிட்டல் விருது வழங்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி போலீசாருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்