குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-10-16 23:35 IST

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு என்கிற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், உதவி தலைமை ஆசிரியர் எம்.மாரிமுத்து, க.திருமொழி, பி.ரோசலின்பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவிகள் குழந்தை திருமணம் இல்லா தமிழ் நாடு என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்