தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டம்
தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டம் நடந்தது.
கரூரில் நேற்று தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத்தலைவர் அம்பலத்தரசு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி வரவேற்றார். இக்கூட்டத்தில் 1996-ல் முத்தரையர் உட்பிரிவினர் (29 பிரிவுகள்) அனைவரையும் முத்தரையர் என்ற ஒருபெயரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. உடனடியாக இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும். முத்திரியர், முத்துராஜா, முத்தரையர், முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயக்கர் அனைவரையும் உடனடியாக எம்.பி.சி.யில் சேர்க்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட அரசினை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.