கோபி, சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கோபி, சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி, சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையத்தில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலை பாரபட்சமான முறையில் சீல் வைக்க முயற்சி செய்து வரும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திருப்பூர் போலீஸ் துறையினரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் என்.எஸ்.சம்சுதீன் தலைமை தாங்கினார். ஜாமீர் கபீர் அல்ஹே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகி ஷேக் அலாவுதீன், கட்சியின் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைச்செயலாளர் குத்புதீன் உள்பட பலா் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலம் புது பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பயாஸ் தலைமை தாங்கினார்.
சத்தியமங்கலம் நகர தலைவர் தாஜ், செயலாளர் ஆசிப் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.