தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்தும், முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குதரத்துல்லா தலைமை தாங்கினார். தலைமை பிரதிநிதி வக்கீல் சம்சுதீன் சேட் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் காமராஜர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முகம்மது அனிபா வரவேற்றார். முடிவில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜாவித்பாஷா நன்றி கூறினார்.