வண்டலூர் உயிரியல் பூங்காவில் தாய்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்று திரும்பிய யானை பாகன்களுக்கு பரிசு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தாய்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்று திரும்பிய யானை பாகன்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் பரிசு வழங்கினார்.

Update: 2023-02-14 07:00 GMT

தாய்லாந்து யானைகள் காப்பக மையத்தில் யானைகள் வளர்ப்பு மற்றும் காப்பக பராமரிப்பு பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தில் இருந்து 13 யானை பாகன்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் சென்றிருந்தனர். அவர்கள் பயிற்சி முடிந்து சென்னை திரும்பினர். பயிற்சி முடித்து திரும்பிய 13 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

உயிரியல் பூங்காவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் சீருடைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்-தலைமை வனஉயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ரா ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்