"இப்படிப்பட்ட கவர்னரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை" - ராமதாஸ்

இப்படிப்பட்ட கவர்னரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-01-09 10:30 GMT

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் புறக்கணித்தார்.

இதற்கு கவர்னர் முன்பே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், கவர்னர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தெரிவித்தார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இந்த நிலையில் தேசியகீதம் இசைப்பதற்குள் கவர்னர் வெளியேறியது அவை மீறல் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் கவர்னரின் இந்த செயலுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட கவர்னரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்