தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-02-14 18:45 GMT


மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாதனை விளக்க கண்காட்சி

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் 'ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைகோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி' என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதனை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. புகைப்பட கண்காட்யை காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிடலாம்.

கலை நிகழ்ச்சிகள்

மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது. மகளிர் சுய உதவிகுழுக்கள் தயாரித்த பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.

வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை போன்ற துறை சார்ந்த திட்டங்களும் தனித்தனி அரங்குகளில் காட்சிபடுத்தப்படும். இதன் மூலம் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்