தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவலாஞ்சி அணையை பார்வையிட்டார்-தோடர்இன பெண்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவலாஞ்சி அணையை பார்வையிட்டார். மேலும் தோடர் இன பெண்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Update: 2023-06-09 01:30 GMT

ஊட்டி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவலாஞ்சி அணையை பார்வையிட்டார். மேலும் தோடர் இன பெண்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கவர்னர் வருகை

ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த 3-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து 5-ந் தேதி துணை வேந்தர்கள் மாநாட்டை அவர் தொடங்கி வைத்து பேசினார். இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தனது மனைவி லட்சுமி மற்றும் குடும்ப நண்பர்களுடன் அவலாஞ்சி அணையை சுற்றி பார்த்தார். இதற்காக ராஜ் பவனில் இருந்து காலை 11.30 மணி அளவில் கார் மூலம் கிளம்பி ஊட்டி, பாலாடா, இத்தலார், எமரால்டு வழியாக அவலாஞ்சி அணை பகுதியை சென்றடைந்தார். அங்கு அவலாஞ்சி அணையின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டார்.

அப்போது அவலாஞ்சி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கீழ் பகுதியில் உள்ள குந்தா அணைக்கு கொண்டு செல்லப்பட்டு குந்தாவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவலாஞ்சியில் உள்ள வனத்துறை தங்கும் விடுதிக்கு சென்றார். மேலும் அங்கு சூழல் சுற்றுலாவில் பணியாற்றும் தோடர் இன பெண்கள் மற்றும் ஆண்களுடன் சகஜமாக கலந்துரையாடினார். அப்போது தோடர் இன பெண்கள், கவர்னருக்கு சால்வையை பரிசாக கொடுத்தனர். இதன் பின்னர் அவர்கள் கவர்னருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இன்று சென்னை திரும்புகிறார்

இதேபோல் அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் மின்வாரிய துறையினரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிளம்பி மதியம் 3.30 மணிக்கு மீண்டும் ராஜ் பவனை வந்தடைந்தார். கவர்னரின் ஒரு வார பயணம் முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்