தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிமை) கோவை வருகிறார்.
கோவை
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிமை) கோவை வருகிறார்.
கவர்னர் கோவை வருகை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9.25 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் செல்கிறார்.
பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை பதக்கம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் கவர்னர் கலந்துரையாடுகிறார்.
பழனி தண்டாயுதபாணி கோவில்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு காரில் புறப்பட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்கிறார்.
அங்கு மாலை 6.30 மணிக்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர் பாரதியார் பல்கலைக்கழகம் வருகிறார். இரவு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
நொய்யல் பெருவிழா
நாளை (வெள்ளிக்கிழமை) பேரூரில் பேரூர் ஆதீனம் நடத்தும் நொய்யல் பெருவிழா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் பாரதியார் பல்கலைகழக விருந்தினர் மாளிககை்கு கவர்னர் வருகிறார்.
பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு மதியம் 2.10 மணிக்கு கவர்னர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.