தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு..!

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-11 04:22 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் அளித்து நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.

அடுத்த கட்டமாக ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டும் என்றும் தலைமை செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஒய்வுபெற்றார் ஆணையத் தலைவராக இருப்பார் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐ.ஜி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபணத்துவம் பெற்றவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர் என்றும் ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பர் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணிக்கு; அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும் எனவும் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ரூ.5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும் என தமிழக அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்