அரசு மருத்துவமனையை மக்கள் அச்சமின்றி அணுக தமிழக அரசு உத்தரவாதத்தை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

Update: 2023-08-03 09:14 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முகக்கவசத்திற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தியது அறிந்து அதிர்ச்சியுற்றேன். தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவனையை நாடும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரும் உத்தரவாதம் இதுதானா?.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் தங்குதடையின்றி வழங்கி முன்னரே இருப்பு வைக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்